சாலைகளை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்


சாலைகளை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2017 4:30 AM IST (Updated: 3 Oct 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

அருமனை அருகே சாலைகளை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வாழை நட்டும், தண்ணீர் இறைத்தும் நூதன போராட்டம் நடத்தினர்.

அருமனை,

அருமனை அருகே புண்ணியம்–அண்டுகோடு சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீர் நிரம்பி இருக்கும் பள்ளங்களில் தவறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிகிறது.

இந்தநிலையில், சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் அவர்கள் வாழை நட்டும், நீரில் வலையை விரித்து மீன் பிடிப்பது போல் நடித்தும் போராட்டம் நடத்தினர்.

இதுபோல், உத்திரங்கோடு–மஞ்சாலுமூடு சாலையும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது போல் சாலையில் தேங்கி நின்ற தண்ணீரை இறைத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story