திருப்பூர் 22-வது வார்டில் சுகாதார பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் 22-வது வார்டில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் 22-வது வார்டு மாநகராட்சிக்குட்பட்ட அருள்ஜோதி நகர், ஜீவாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முறையாக குப்பைகள் அள்ளப்படுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். மேலும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தேங்கி பல இடங்களில் தொற்று நோய் பரவி வருகிறது.
இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நேற்று அருள்ஜோதி நகர் வடக்கு பகுதியில் உள்ள ஜீவாநகரில் உள்ள பிரதான வீதியில் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எங்கள் பகுதியில் பல மாதங்களாக சாக்கடை கழிவுகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. குப்பைகளை அள்ளுவது, சாக்கடை கால்வாய்களில் தூர்வாருவது குறித்து வார்டு துப்புரவு பணியாளர்களுக்குள்ளே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் நிரம்பி வீடுகளுக்குள் அடிக்கடி செல்கிறது. இதனால் சில நேரங்களில் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, அடைப்புகளை எடுத்து விடுகிறோம்.
சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. கழிவுநீர் தேங்குவதால் கொசுக்களின் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கழிவு நீர் கால்வாய்களில் இருந்து ஒருசில நேரங்களில் அள்ளப்பட்டாலும் அவற்றை கால்வாயின் ஓரத்திலேயே கொட்டி வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story