ரவுடி ஸ்ரீதர் கூட்டாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு கலெக்டர் உத்தரவு


ரவுடி ஸ்ரீதர் கூட்டாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 4 Oct 2017 5:15 AM IST (Updated: 4 Oct 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதர் கூட்டாளியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உத்தரவிட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே முசரவாக்கம் பகுதியில் வசிப்பவர் சுரேஷ் என்கிற மிலிட்டரி சுரேஷ் (வயது 37). இவர் காஞ்சீபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி. இவர் மீது காஞ்சீபுரம் தாலுகா, சின்ன காஞ்சீபுரம், பெரிய காஞ்சீபுரம், பாலுச்செட்டிசத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் உள்ளன.

இவர் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர் ரவுடி சுரேஷ் என்கிற மிலிட்டரி சுரேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தார்.

மேலும் சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு அவர் சிபாரிசு செய்தார். இதுபற்றி சந்தோஷ் ஹதிமானி மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அந்த உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சிறைபிரிவில் அடைக்கப்பட்டார்.


Next Story