செஞ்சிபானம்பாக்கத்தில் போலி டாக்டர் கைது


செஞ்சிபானம்பாக்கத்தில் போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2017 5:30 AM IST (Updated: 4 Oct 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த செஞ்சிபானம்பாக்கம் பகுதியில் போலி டாக்டர்கள் அதிகம் உள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் தயாளனுக்கு தகவல் கிடைத்தது.

திருவள்ளூர்,

இதனை தொடர்ந்து நேற்று அவரது தலைமையில் அதிகாரிகள் செஞ்சிபானம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிளினிக்கில் சென்று சோதனை நடத்தினார்கள்.

அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த பெரோஸ் அகமது (வயது 48) என்பவரிடம் அதிகாரிகள் எம்.பி.பி.எஸ் படித்ததற்கான உரிய ஆவணம் கேட்டனர். ஆனால் அவர் அதற்குரிய ஆவணங்களை கொடுக்காமல் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது பெரோஸ் அகமது எம்.ஏ. வரலாறு முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்டு கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் இதுபற்றி கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போலி டாக்டர் பெரோஸ் அகமதுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story