திருவள்ளூர் நகராட்சி அருகில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் நடிகர் சிவகுமார் திறந்து வைத்தார்
தென்மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை தயாரித்து விற்பனையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சாதனை படைத்து வருகிறது.
திருவள்ளூர்,
தற்போது திருவள்ளூர் ஜே.என்.ரோடு நகராட்சி அலுவலகம் அருகில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஷோரூமை நடிகர் சிவகுமார் திறந்து வைத்தார். முதல் விற்பனையை திருவள்ளூர் ஸ்ரீகுமரன் டெக்ஸ் நிர்வாக இயக்குனர் வி.நடராஜன் தொடங்கி வைத்தார். ஆர்.எம். ஜூவல்லர்ஸ் பி.பதம்சந்த், கிஷோர், லோகேஷ்பத்மாவதி ஆகியோர் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டனர். முன்னதாக திறப்பு விழாவுக்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் அதிகாரிகள் செல்வக்குமார், கணபதி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த ஷோரூமில் வேட்டிகள், சட்டைகள் பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இளைஞர்கள், குழந்தைகளுக்கான வேட்டி, சட்டைகள், வெல்குரோ பாக்கெட் வேட்டிகள், பெண்களுக்கான உள்ளாடைகளும் இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story