பள்ளி கல்வியில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் அடுத்த மாதம் 15-ந்தேதி வெளியிடப்படும்


பள்ளி கல்வியில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் அடுத்த மாதம் 15-ந்தேதி வெளியிடப்படும்
x
தினத்தந்தி 4 Oct 2017 4:30 AM IST (Updated: 4 Oct 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி கல்வியில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் அடுத்த மாதம் 15-ந்தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

செம்பட்டு,

பள்ளி கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஆய்வுக்கூட்டம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை மாற்றுவது, தமிழ் பண்பாடு, கலாசாரம் மற்றும் தொன்மையை அதில் இடம்பெற செய்வது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

புதிய பாடத்திட்டமானது வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் இருக்கும்.

தமிழக கல்வித்துறையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக பாடங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனை மாற்ற இருக்கிறோம். மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வெளியிடப்படும். அதன்பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். கல்வியாளர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்த பின்னர், அடுத்த கல்வியாண்டு முதல், அவை பாடமாக வெளியிடப்படும்.

மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலான பயிற்சி மையங்கள் 500 இடங்களில் அமைக்கப்படும். வருகிற 20-ந்தேதிக்கு பின்னர் இதற்கான பணிகள் தொடங்கும். அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண், ரத்த வகை பற்றிய விவரங்களுடன் ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்படும். ‘ஸ்மார்ட்‘ வகுப்புகளும் தொடங்கப்படும்.

தொழில் அதிபர்களின் உதவியுடன் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க, பள்ளி திறந்த நாளில் இருந்து பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story