சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Oct 2017 4:15 AM IST (Updated: 4 Oct 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முதல் ரெயில் நிலையம் வரை உள்ள ஈ.வி.என். ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். அதனால் அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை, ஈரோடு மாநகராட்சி மற்றும் போலீஸ் துறை சார்பில் ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நடராஜ், மாநகராட்சி 3-வது மண்டல உதவி ஆணையாளர் பாஸ்கர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரமாக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள் மற்றும் நிழலுக்காக கடையின் முன் பகுதியில் போடப்பட்டு இருந்த பந்தல்கள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது பிரச்சினை ஏதும் வராமல் இருக்க போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘ஈரோடு மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று சாலையோர ஆக்கிரமிப்பு கள் அகற்றும் பணி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும்’ என்றனர். 

Related Tags :
Next Story