மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம்: டி.டி.வி. தினகரனை கைது செய்ய போலீசார் தீவிரம்
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்த வழக்கில் டி.டி.வி. தினகரனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சேலம்,
சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம். தினகரன் ஆதரவாளரான இவர் அ.தி.மு.க. (அம்மா அணி) சேலம் மாநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் வெங்கடாசலம் தலைமையில் கடந்த மாதம் 29-ந் தேதி டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சிலர் தாதகாப்பட்டி உழவர் சந்தை மற்றும் சண்முகாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சேலம் அஸ்தம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சரவணன் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் ‘தமிழக அரசை விமர்சித்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்த டி.டி.வி. தினகரன் உள்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில், அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், எஸ்.கே.செல்வம் உள்பட 17 பேர் என மொத்தம் 36 பேர் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன், புகழேந்தி உள்பட 31 பேரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை விரைவில் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே பெயர் தெரியாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பட்டியலில் முக்கிய நிர்வாகிகளை சேர்த்து அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Tags :
Next Story