சேதுபாவாசத்திரம் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து சாலை மறியல்
சேதுபாவாசத்திரம் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாகுபடி பொய்த்து போனதால் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பெருமகளூர் சரக விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று காலை சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மந்திரிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பெருமகளூர் பேரூராட்சி, கொளக்குடி, முதுகாடு, விளங்குளம், சோலைக்காடு, திருவத்தேவன், அடைக்கத்தேவன், குப்பத்தேவன், ருத்திரசிந்தாமணி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, பட்டுக்கோட்டை தாசில்தார் ரகுராமன், கூட்டுறவு துணை பதிவாளர் மாரியப்பன், சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு, சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வருகிற 20-ந் தேதிக்குள் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story