வரைவு பட்டியல் வெளியீடு: வாக்காளர்களின் எண்ணிக்கை 17½ லட்சமாக அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்மூலம் வாக்காளர்களின் எண்ணிக்கை 17½ லட்சமாக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
திண்டுக்கல்,
இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி நாடு முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 17 லட்சத்து 51 ஆயிரத்து 731 வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், 8 லட்சத்து 60 ஆயிரத்து 913 பேர் ஆண்களும், 8 லட்சத்து 90 ஆயிரத்து 671 பேர் பெண்களும் ஆவார்கள். இதரர் 147 பேரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கம் போல இந்த முறையும் பெண் வாக்காளர்களே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்களைவிட 29 ஆயிரத்து 758 அதிகமாகும். மாவட்டம் முழுவதும் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் ஆத்தூர் தொகுதியில்தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர். குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக நிலக்கோட்டை திகழ்கிறது.
நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 31-ந்தேதி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். புதிய வாக்காளர்களை சேர்த்தல், தகுதியற்றவர்களை நீக்குதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடக்கும்.
எனவே, பெயர் சேர்க்க, நீக்க, தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள், அதற்காக விண்ணப்பம் செய்யலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 1-1-2018 தேதி அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும், வருகிற 8-ந்தேதி மற்றும் 22-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.
வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அருண்சத்யா, தனி தாசில்தார் (தேர்தல்) மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story