2 மகள்கள், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று, ஓய்வுபெற்ற அதிகாரி தற்கொலை
திருச்சி அருகே 2 மகள்கள், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, ஓய்வுபெற்ற அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர்களை பராமரிக்க முடியாததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜீயபுரம்,
திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் திருச்செந்துறை அக்ரகாரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 85). இவருடைய மனைவி கமலா(80). இவர்களுடைய மகன்கள் சுப்பிரமணியன்(55), ரகு(40), மகள்கள் அகிலா(50), மது(45). கிருஷ்ணமூர்த்தி பீகார் மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் ரூர்கேலா உருக்காலையில் டெலிபோன் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
பின்னர் அவர் அங்கிருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் திருச்செந்துறை அக்ரகாரம் பகுதியில் வீடு வாங்கி வசித்து வந்தார். கிருஷ்ணமூர்த்தியின் மகள்களான அகிலா, மது, மகன் ரகு ஆகிய 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். அதற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததால், அவர்களுக்கு திருமணமாகவில்லை. மூத்த மகன் சுப்பிரமணியன் மட்டும் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார். மேலும் தாய் கமலாவை தன்னுடைய வீட்டில் வைத்து கவனித்து வருகிறார்.
கிருஷ்ணமூர்த்தி, அக்ரகாரத்தில் உள்ள வீட்டிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட அகிலா, மது, ரகு ஆகியோருக்கு சமையல் செய்து கொடுத்து விட்டு, கூடவே இருந்து கவனித்து வந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட மகள்கள், மகனை வயதான தன்னால் பராமரிக்க முடியவில்லை என்று வேதனையுடன் குடும்பத்தினரிடம் கூறி வந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டுக்கு தினமும் பால் பாக்கெட் போடும் பால்காரர் நேற்று காலை 9.30 மணியளவில் சைக்கிளில் வந்து, பால் பாக்கெட்டை வீட்டின் முன்புறம் அறையில் வைக்க சென்றார். அப்போது அங்கு நேற்று முன்தினம் காலை, மாலையில் வைத்த பால் பாக்கெட்டுகள் எடுக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்தார். அப்போது வீட்டின் மற்றொரு அறையின் கதவு திறந்து கிடந்தது. இதனால் பால்காரர் ரகுவை சத்தம்போட்டு கூப்பிட்டுள்ளார். ஆனால் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் பால்காரர் வீட்டின் உள்ளே அறைக்கு சென்றார்.
அப்போது அந்த அறையில் அகிலா வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் இதுகுறித்து அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திரண்டு வந்து, கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் மற்றொரு அறையில் கிருஷ்ணமூர்த்தியும், அவரது மகன் ரகுவும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிசாரணை நடத்தினர்.
கிருஷ்ணமூர்த்தி அருகே உணவு சாப்பிட்ட பாத்திரங்கள் மற்றும் டம்ளர்கள் சிதறி கிடந்தன. வீட்டில் கிருஷ்ணமூர்த்தியுடன் வசித்து வந்த மற்றொரு மகளான மதுவை காணாததால் போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. இதனால் மதுவை போலீசார் தேடினர். அப்போது வீட்டின் பின்புற பகுதிக்கு சென்று பார்த்தபோது, அங்கே வாயில் நுரை தள்ளிய நிலையில் மதுவும் பிணமாக கிடந்தார். ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம், அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.
இதுகுறித்து திருச்சி சுப்பிரமணியபுரத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தியின் மகன் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கும், மனைவி கமலாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
இதையடுத்து போலீசார் கிருஷ்ணமூர்த்தி, அகிலா, மது, ரகு ஆகிய 4 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சுகளில் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி, அவரது மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள்கள், மகனை வயதான காலத்திலும் கிருஷ்ணமூர்த்தி சிரமத்துடன் கவனித்து வந்தார். தொடர்ந்து அவர்களை பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அதனால் தற்கொலை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
தான் இறந்து விட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட மகள்கள், மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்த கிருஷ்ணமூர்த்தி, உணவில் விஷம் கலந்து தனது மகள்களுக்கும், மகனுக்கும் கொடுத்து கொன்று விட்டு, தானும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story