தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜி.கே.மணி வேண்டுகோள்


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜி.கே.மணி வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:45 AM IST (Updated: 5 Oct 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் கிழக்கு, வடக்கு மாவட்ட பா.ம.க. ஆலோசனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் கிழக்கு, வடக்கு மாவட்ட பா.ம.க. ஆலோசனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்துக்கு இந்த வருடம் தரவேண்டிய ரூ.4 ஆயிரம் கோடியை தேசிய நிதி ஆணையம் வழங்கவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். ஆண்கள் இளம்வயதிலேயே மது குடித்து இறந்து விடுவதே இதற்கு காரணம். எனவே மதுக்கடைகளை அரசு மூடவேண்டும். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசும், சுகாதார துறையினரும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ம.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் வ.பாலா என்ற பாலயோகி தலைமையில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்துக்கு புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்க உள்ளார். அவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்’’ என்றார்.


Next Story