வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை,
தமிழ்நாடு வேளாண்மைத்துறை அலுவலர் சங்கத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பாளையங்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகி கருப்பசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கொலை செய்த உதவி வேளாண்மை அலுவலர் அமுதன் இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டும். வாரிசுக்கு வேலை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வேளாண்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story