பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி நாகையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை ஒன்றியம் செல்லூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து அனைத்து விவசாயிகள் சார்பில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி தலைமை தாங்கினார். விவசாய சங்கத்தை சேர்ந்த கனகராஜ், தங்கராஜ், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நாகை ஒன்றியம் செல்லூர் வருவாய் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.

நாகை ஒன்றியம் செல்லூர் வருவாய் கிராம பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து, அதற்கான பயிர்க் காப்பீட்டு தொகையும் செலுத்தியுள்ளனர். ஆனால் நாகை ஒன்றியம் செல்லூர் கிராமத்திற்கு இதுவரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கவில்லை. எனவே செல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனே பயிர்க்காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு கலெக்டர் சுரேஷ்குமார், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன், செல்லதுரை, ஜெயராமன், ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story