தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை முத்தரசன் வலியுறுத்தல்


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை முத்தரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மீது மக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆகவே உடனடியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும். டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 32 பேர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் வந்தும் எந்த நன்மையும் இல்லை. எனவே ஆறுகளை தூர்வார வேண்டும்.

டெங்கு காய்ச்சல்

உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் கூறியும் தேர்தல் நடத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான பயிர்க் கடனை தள்ளுபடி செய்து புதிதாக கடனை வழங்க வேண்டும். விதை, உரம், விவசாய இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story