கலெக்டர் அலுவலகத்தில் பழுதடைந்த லிப்டுக்கு மாலை போட்டு மாற்றுத்திறனாளி நூதன போராட்டம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பழுதடைந்த லிப்டுக்கு மாலை போட்டு மாற்றுத்திறனாளி நூதன போராட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சாகுல் அமீது, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது மாடியிலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக நேற்று வந்திருந்தார். அப்போது கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள லிப்ட் இயங்காததால் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய கைப்பிடிகளை வைத்து தடுமாறியவாறே படியின் வழியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று வந்தார். இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான சாகுல் அமீது, பூ மாலை ஒன்றை வாங்கி வந்து, பழுதடைந்த அந்த லிப்டுக்கு போட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்தை நிறைவு செய்து விட்டு சந்திரகாசி எம்.பி., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் அவ்வழியாக சென்றனர். அப்போது மாற்றுத்திறனாளியின் போராட்டத்தை கண்டதும் அங்கு வந்து, சாகுல் அமீதுவை சமாதானப்படுத்தினர். மேலும் லிப்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினர். இதையடுத்து அங்கிருந்து சாகுல் அமீது புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் லிப்டுக்கு போடப்பட்டிருந்த மாலையை எடுத்து அப்புறப்படுத்தினர்.

Related Tags :
Next Story