நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 10½ பவுன் சங்கிலி பறிப்பு


நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 10½ பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2017 2:00 AM IST (Updated: 5 Oct 2017 7:22 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 10½ பவுன் தங்க சங்கிலியை 2 மர்ம மனிதர்கள் பறித்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியர் நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை

நெல்லை,

நெல்லையில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 10½ பவுன் தங்க சங்கிலியை 2 மர்ம மனிதர்கள் பறித்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியர்

நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 60). இவர் தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ராஜஸ்ரீ. இவர்கள் இருவரும் சம்பவத்தன்று பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் இணைப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள், செல்வராஜை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள், ராஜஸ்ரீ கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது செல்வராஜூம், ராஜஸ்ரீயும் கூச்சலிட்டபடி அவர்களிடம் போராடினர்.

சங்கிலி பறிப்பு

ஆனாலும் மர்ம மனிதர்கள் அவர்களை தாக்கி அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் தள்ளினர். பின்னர் ராஜஸ்ரீ அணிந்து இருந்த 10½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். மர்ம மனிதர்கள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வராஜ், ராஜஸ்ரீ ஆகிய இருவரும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story