திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் தூய்மை பணி


திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் தூய்மை பணி
x
தினத்தந்தி 6 Oct 2017 1:30 AM IST (Updated: 5 Oct 2017 8:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் அணி எண் 43, 44, 45 மற்றும் 48

திருச்செந்தூர்,

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் அணி எண் 43, 44, 45 மற்றும் 48 இணைந்து தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இருந்து வைகுண்டசுவாமி கடற்கரை வரை தூய்மை பணிகள் நடந்தது.

ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதையொட்டி தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் கலைநயத்துடன் கூடிய குப்பைத் தொட்டி திருச்செந்தூர் நகரப்பஞ்சாயத்துக்கு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஐயபாஸ்கரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட திட்ட அலுவலர் பிச்சை ஆகியோர் தூய்மை பணியை தொடங்கி வைத்தனர். திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணே‌ஷகுமார், தாசில்தார் அழகர், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், திருச்செந்தூர் நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் மனோரஞ்சிதம், சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் யக்ன நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் கதிரேசன், சுந்தரவடிவேல், வசுமதி, மருதையா பாண்டியன் ஆகியோர் வழிநடத்தினர். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை உதவி அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்தனர்.


Next Story