பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சீர்காழியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு தொகைக்கான பிரீமியம் கட்டியிருந்தனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வள்ளுவக்குடி கிராமத்திற்கு பயிர்க் காப்பீட்டு தொகை 87.99 சதவீதம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்காத கூட்டுறவுதுறை, புள்ளியல்துறை, வேளாண்மைத்துறை, பயிர் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றை கண்டித்து நேற்று சீர்காழியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி எதிரே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வள்ளுவக்குடி விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் அறிவித்த நிவாரண தொகையினை உடனே வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு, சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story