நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான குடோனில் ரூ.1 லட்சம் கவரிங் நகைகள், பொருட்கள் திருட்டு
நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான குடோனில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகள், பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
மும்பை,
மும்பை அந்தேரியில் நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் நடிகை படப்பிடிப்பிற்கு பயன்படுத்தும் கவரிங் ஆபரணங்கள், மேடை அலங்கார பொருட்கள், ஆடைகள், பழங்காலத்து சிலைகள் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை ஹேமமாலினியின் மேலாளர் குடோனுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள், சிலைகள், அலங்கார பொருட்கள் மாயமாகி இருப்பதை பார்த்தார். மேலும் குடோனில் வேலை பார்த்த பெண்ணும் காணாமல் போயிருந்தார். அவரை தொடர்பு கொண்ட போது அந்த பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
ஹேமமாலினியின் மேலாளர் இதுகுறித்து ஜூகு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேலைக்கார பெண்ணை தேடி வருகின்றனர். வேறு யாரும் இந்த திருட்டில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த 2010–ம் ஆண்டு நடிகை ஹேமமாலினியின் கோரேகாவ் பங்களா வீட்டில் ரூ.80 லட்சம் பணம், தங்க நகைகளை வேலைக்கார பெண் ஒருவர் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story