டெங்கு தடுப்பு தினத்தையொட்டி கொசு ஒழிப்பு பணி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


டெங்கு தடுப்பு தினத்தையொட்டி கொசு ஒழிப்பு பணி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:15 AM IST (Updated: 6 Oct 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு தடுப்பு தினத்தையொட்டி கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வாரம்தோறும் வியாழக்கிழமை டெங்கு தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கொசு ஒழிப்பு புகை மருந்தை அடித்து சுகாதார பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு தடுப்பு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகள், மாநகராட்சி, நகராட்சி நகர்நல அதிகாரிகள் ஆகியோர் பள்ளிக்கூடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பள்ளிக்கூடங்களில் இறை வணக்கத்தின்போது மாணவ-மாணவிகள் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், 7-ந் தேதி (நாளை) வரை 3 நாட்களுக்கு பள்ளிக்கூடங்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

காய்ச்சல் வார்டு

ஈரோடு மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கம் சார்பில் ஓட்டல்களில் ஏடிஸ் கொசு இல்லாத நிலையை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் வார்டு தனியாக அமைக்கப்பட்டு உள்ளது.

வாரம்தோறும் வியாழக்கிழமை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏடிஸ் கொசு இல்லை என்று சான்றளிக்க சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்களும் தங்களது பகுதியில் கொசு உற்பத்தியாகாத வண்ணம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை பெற ே-்வண்டும்.

கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேனகா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Related Tags :
Next Story