டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி நோய் தடுப்பு பணி தீவிரம்
பேராவூரணி அருகே டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலியானார். இதனால் அந்த பகுதியில் நோய் தடுப்பு பணியில் சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மேலமணக்காட்டை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி யோகேஸ்வரி. இவர்களுடைய மகள் கயல் (வயது19). இவர் பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கயலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு கயலுக்கு ரத்த பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி கயல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொதுமக்கள் பீதி
இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதார துறையினர் கொசு மருந்து அடித்தும், நிலவேம்பு கசாயம் கொடுத்தும் நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் இதுவரை 3 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story