பவுர்ணமியையொட்டி நெரூர் சதாசிவப்பிரமேந்திராள் கோவிலில் சிறப்பு வழிபாடு
பவுர்ணமியையொட்டி நெரூர் சதாசிவப்பிரமேந்திராள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்,
கரூர் அருகே நெரூரில் சற்குரு சதாசிவப்பிரம்மேந்திராள் அதிஷ்டானம் மற்றும் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் காசிவிஸ்வநாதர் சன்னதி பின்புறம் சற்குரு சதாசிவப்பிரம்மேந்திராள் ஜீவசமாதி அமைந்துள்ளது. பவுர்ணமியையொட்டி இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பவுர்ணமியையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதேபோல சதாசிவப்பிரம்மேந்திராள் அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஜீவசமாதியில் பூக்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ஜீவசமாதியிலும் வழிபாடு நடத்தினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த கடைகளில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

Related Tags :
Next Story