ஷேர் ஆட்டோ-ஸ்கூட்டர் மோதல்; 2 பேர் பலி உறவினர்கள் சாலை மறியல்-தீ வைப்பு
மங்களமேடு அருகே ஷேர் ஆட்டோ-ஸ்கூட்டர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் விபத்தில் சிக்கிய ஷேர் ஆட்டோவை தீ வைத்து எரித்தனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நெப்போலியன்(வயது 28). விவசாயி. இவர், நேற்று சொந்த வேலை காரணமாக தனது ஸ்கூட்டரில் திட்டக்குடிக்கு வந்து விட்டு பின்னர் கீழப்பெரம்பலூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது கீழப்பெரம்பலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அகரம்சீகூர் அரியலூர் மெயின்ரோட்டில் வந்தபோது ஷேர் ஆட்டோவும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் ஸ்கூட்டரில் வந்த நெப்போலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஷேர் ஆட்டோ டிரைவர் கீழப்பெரம்பலூரை சேர்ந்த பாக்கியராஜ்(28), கைப்பெரம்பலூரை சேர்ந்த செங்கமலை(62), கணபதி மனைவி மலர்(45), குமார் (26), திட்டக்குடியை சேர்ந்த செல்வராசு மனைவி சாவித்திரி(40) ஆகிய 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர்.உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பாக்கியராஜ் உள்பட 5 பேரையும் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செங்கமலை பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காயத்துடன் பாக்கியராஜ் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் விபத்தில் இறந்த நெப்போலியனின் உடல் சம்பவ இடத்திலேயே கிடந்தது. ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதை கண்டித்து நெப்போலியனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கிய ஷேர் ஆட்டோவை பொதுமக்கள் தீ வைத்து கொளுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு போலீசார் ஷேர் ஆட்டோவில் பற்றிய தீயை அணைத்து அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தினர். சுமார் 1½ மணி நேரத்திற்கு பின்னர் நெப்போலியனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேர் ஆட்டோ டிரைவர் பாக்கியராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story