இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வாகனம் மூலம் பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  விழிப்புணர்வை ஏற்படுத்த வாகனம் மூலம் பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:30 AM IST (Updated: 6 Oct 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வாகனம் மூலம் மேற்கொள்ளும் பிரசாரத்தை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம நலன் மற்றும் தூய்மைக்கான இருவார விழாவினை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தினை(திறன் ரதம்) குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில், கடந்த 1–ந் தேதி முதல் வருகிற 15–ந் தேதி வரை கிராம ஊராட்சிகளில் கிராம தூய்மை, முழு சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்கள் நடத்துதல், வங்கியாளர்களுக்கான கருத்தரங்கு நடத்துதல், கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இளைஞர்களுக்கான திறன் முகாம் நடத்துதல், சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தேவைகளை பூர்த்தி செய்தல், மின்னணு முறையில் பணமில்லா பரிமாற்றம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், 83 கிராம ஊராட்சிகளில் அடிப்படை புள்ளி விவர கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வியக்கத்தின் மூலம், ஊரகப்பகுதிகளில் 18 முதல் 35 வயது வரையுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், 18 வயது முதல் 40 வயது வரையுள்ள வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கும், வேலை வாய்ப்பை பெற்று தரும் பொருட்டு மத்திய அரசின் ‘தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கவு‌ஷல் யோஜனா’ என்ற திட்டத்தின்கீழ், வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் வளர்ப்புப் பயிற்சிகள் உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள்   ஷ்ஷ்ஷ்.ளீணீusலீணீறீஜீணீஸீழீமீமீ.ஸீவீநீ.வீஸீ    என்ற இணையதள முகவரியில் தங்களுடைய பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் பெற விரும்பும் பயிற்சி பற்றிய விவரங்களை பதிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)நிஜாமுதீன், உதவி திட்ட அலுவலர் அந்தோணிசிலுவை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story