சேத்துப்பட்டு அருகே ஆற்றை கடந்து செல்லும் மாணவர்கள்
சேத்துப்பட்டு அருகே உள்ள கொழப்பலூர் கிராமத்தில் இருந்து கோணையூர், காட்டேரி, மேட்டூர் ஆகிய கிராம மக்கள் ஆற்றின் வழியாக தான் விநாயகாபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருகே உள்ள கொழப்பலூர் கிராமத்தில் இருந்து கோணையூர், காட்டேரி, மேட்டூர் ஆகிய கிராம மக்கள் ஆற்றின் வழியாக தான் விநாயகாபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் நேற்று கொழப்பலூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் விநாயகாபுரம், கோணையூர், மேட்டூர் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளை கொழப்பலூருக்கு ஆற்றின் வழியாக அழைத்து சென்றனர்.
ஆற்றில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது எனவே, கொழப்பலூர், விநாயகாபுரம் வரை பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story