ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா


ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா
x
தினத்தந்தி 7 Oct 2017 2:00 AM IST (Updated: 6 Oct 2017 7:14 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை புனித அருளானந்தர் கல்லூரி ஆங்கில பேராசிரியரும், சேசு சபை குருவுமான ரூபஸ் திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடந்தது.

விழாவில் பங்குதந்தைகள் பங்கராசு (குலசேகரன்பட்டினம்), சாலமோன் (மணப்பாடு), மரியதாஸ் (கூட்டப்புளி), சந்தீஸ்டன் (கீழ முடிமண்), பீட்டர் பால் (செட்டிவிளை), ஜோசப் (உவரி) உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

2–ம் திருநாளான நேற்று காலையில் கூடுதாழை பங்குதந்தை ஜெகதீஷ் தலைமையில் திருப்பலி நடந்தது. கள்ளிக்குளம் ஆங்கில பள்ளி முதல்வர் செல்வராயர் மறையுரையாற்றினார். விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

10–ம் திருநாளான 14–ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. 11–ம் திருநாளான 15–ந்தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை வில்சன், உதவி பங்குதந்தை ரோசன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story