மியான்மரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: கூடலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மியான்மரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: கூடலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:15 AM IST (Updated: 7 Oct 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து கூடலூரில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கூடலூர்,

மியான்மர் நாட்டில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான முஸ்லிம்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேறி அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து கூடலூரில் நாம் தமிழர் கட்சியினர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் கேதீசுவரன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் பொன்.மோகன்தாஸ், தலைவர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் சிவகுமாரன், இளைஞர் பாசறை நிர்வாகி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மியான்மர் அரசை கண்டித்தும், ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர செயலாளர் அமித்கான், மாவட்ட செய்தி தொடர்பாளர் அரிகிருஷ்ணன், மாணவர் பாசறை நிர்வாகி பிரகாஷ் மற்றும் மனித நேய மக்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள், பள்ளிவாசல்கள் கமிட்டியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் வாங்கி அருந்தினர்.


Next Story