வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
வாக்காளர் பட்டியல்1.10.2017 முதல் 31.10.2017 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கம், திருத்தம் செய்யவும் உரிய மனுக்களை வழங்கிட ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 3.10.17 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டரிடம் இருந்து பெறப்பட்டு சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடி வாரியாக ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் உடனடியாக அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் வழங்கிட வேண்டும்.
சரிபார்க்கும் பணிதூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் தங்கள் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்போது அந்த வீட்டில் 1.1.2018 அன்று 18 வயது நிரம்பியவர்களை கண்டறிந்து அவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்திட வேண்டும்.
புதிய வாக்காளர் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்த்தல், இறந்த, இடம் மாறிய வாக்காளர்களை நீக்கல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 22–ந்தேதியும் நடக்க உள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள கழகத்தினர் அனைவரும், வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரிபார்த்தல், புதிய மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் இறந்த, போலி வாக்காளர்களை நீக்குதல் பணியில் தீவிரமாக விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.