ராஜபாளையம் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியை அதி நவீன ஆஸ்பத்திரியாக்க கோரி ஆர்ப்பாட்டம்


ராஜபாளையம் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியை அதி நவீன ஆஸ்பத்திரியாக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:00 AM IST (Updated: 8 Oct 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியை அதி நவீன ஆஸ்பத்திரியாக்க கோரி ஆர்ப்பாட்டம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2014–15–ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 25–க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். அது போன்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி எதிரே நடந்த போராட்டத்துக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியை அதிநவீனஆஸ்பத்திரியாக மாற்ற வேண்டும், கூடுதலாக குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர், ரத்த பரிசோதனை நிலையம், பரிசோதனை செய்யும் வல்லுனர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. நிலவேம்பு கசாயம் வழங்குவதோடு, சுகாதாரத்தை மேம்படுத்த கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், உதயசூரியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்தனுஷ்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்சுமதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story