வாகன சோதனை செய்த போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி டிரைவர் கைது


வாகன சோதனை செய்த போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி டிரைவர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2017 3:45 AM IST (Updated: 8 Oct 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே வாகன சோதனை செய்த போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ராஜாக்கமங்கலம்,

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, ராஜாக்கமங்கலம் அருகே பருத்திவிளையில் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஒரு லாரி வேகமாக வந்தது. அதனை நிறுத்துமாறு போலீசார் செய்கை காட்டினர். ஆனால், அந்த லாரி நிற்காமல் போலீசார் மீது மோதுவது போல் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் விலகி உயிர் தப்பினர்.

இதையடுத்து அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியின் டிரைவர் அளத்தங்கரையை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து, அவர் மீது லாரி ஏற்றி போலீசாரை கொல்ல முயன்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story