விற்பனையாளரிடம் தகராறு செய்து மதுபாட்டில்களை பறித்து சென்ற வாலிபர் கைது


விற்பனையாளரிடம் தகராறு செய்து மதுபாட்டில்களை பறித்து சென்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2017 3:45 AM IST (Updated: 8 Oct 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

விற்பனையாளரிடம் தகராறு செய்து மதுபாட்டில்களை பறித்து சென்ற வாலிபர் கைது நண்பருக்கு வலைவீச்சு

கபிஸ்தலம்,

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் அரசு மதுக்கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் செபாஸ்டின்(வயது40). இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது புளியம்பாடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(வயது25) மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து மதுக்கடைக்கு சென்று விற்பனையாளர்களிடம் மதுபாட்டில்களை கடனுக்கு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது விற்பனையாளர் செபாஸ்டின் மதுபாட்டில்களை கொடுக்க மறுத்ததால் சுரேஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து செபாஸ்டினுக்கு கொலை மிரட்டல் விடுத்து தகராறு செய்து கடைக்குள் புகுந்து 4 மதுபாட்டில்கள் மற்றும் விற்பனையாளரின் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் அஜர்படுத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.


Next Story