தானேயில் போதைப்பொருளுடன் டியூசன் ஆசிரியர் கைது


தானேயில் போதைப்பொருளுடன் டியூசன் ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2017 3:45 AM IST (Updated: 8 Oct 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் எம்.டி. போதைப்பொருளுடன் டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

தானேயில் எம்.டி. போதைப்பொருளுடன் டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருளை விற்பனை செய்ய வந்தபோது சிக்கினார்.

தானேயில் உள்ள விவியானா வணிக வளாகம் அருகில் ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்ய வர உள்ளதாக வர்த்தக் நகர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கவனித்த போலீசார் அவரை பிடித்து சோதனை போட்டனர்.

இந்த சோதனையின் போது, அவரிடம் எம்.டி. எனப்படும் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருள் 15 கிராம் எடை கொண்டதாக இருந்தது.

அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மும்பை குர்லாவை சேர்ந்த ரியாஷ் அகமது சேக்(வயது34) என்பதும், அவர் டியூசன் ஆசிரியராக இருந்து வருவதும் தெரியவந்தது. அவர் போதைப்பொருள் விற்பனை செய்ய வந்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் குர்லாவில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.

விசாரணையின் போது, அந்த போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக பப்லு மற்றும் நைஜீரிய நாட்டை சேர்ந்த சிலர் கொடுத்ததாக அவர் போலீசாரிடம் கூறினார்.

பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் ஒப்படைத்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் தொடர்புடைய மற்ற ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story