தீபாவளி பண்டிகை எதிரொலி: சன்டே மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை எதிரொலியாக புதுவை சன்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகை வருகிற 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளியை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் புதிய துணிகள், பட்டாசுகள் வாங்குவதில் தீவிரமாக உள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு புதிய புதிய துணி ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. புதுவையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் செயல்படும் சன்டே மார்க்கெட்டில் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் பலரும் கடை போடுகின்றனர்.
இந்த கடைகளில் துணி எடுக்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து துணி எடுத்து சென்றனர்.
அலைமோதிய கூட்டம்
பெற்றோர்களுடன் வந்த குழந்தைகள் சிலர் குறிப்பிட்ட ஆடை ரகங்களை கேட்டு அடம்பிடித்ததையும் சன்டே மார்க்கெட்டில் காண முடிந்தது. குறைந்த விலையில் ஆடைகள் கிடைத்ததால் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடை ரகங்களையும் சிலர் தேர்வு செய்தனர்.
இதேபோல் முக்கிய கடை வீதிகளிலும் ஜவுளிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தில் திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் சாதாரண உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story