புதுச்சேரியில் பரிதாபம்: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு


புதுச்சேரியில் பரிதாபம்: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 9 Oct 2017 4:45 AM IST (Updated: 9 Oct 2017 3:48 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் பரிதாபமாக செத்தனர்.

புதுச்சேரி,

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மகன் லோகேஷ் (வயது 22). அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் சூரியபிரகாஷ் (19). இவர்கள் இருவரும் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக தங்களுடன் பணிபுரியும் நண்பர்கள் வேலு (25) செல்வம் (26) ஆகியோருடன் புதுச்சேரிக்கு வந்தனர்.

இங்கு அவர்கள் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்கள். நள்ளிரவில் மறைமலையடிகள் சாலையில் லோகேசும், சூரியபிரகாசும் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இதில் லோகேஷ், சூரியபிரகாஷ் மற்றும் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பள்ளிதென்னலை சேர்ந்த சதீஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர் கள் வரும் வழியிலேயே லோகேசும், சூரியபிரகாசும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த சதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story