ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும்


ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:15 AM IST (Updated: 9 Oct 2017 3:48 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் உள்ள காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்று அம்பேத்கர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில எழுச்சி மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் பாஸ்கரன் வரவேற்று பேசினார்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் இருந்து பழங்குடியினர் நலத்துறையை தனியாக பிரித்து அரசாணை வெளியிடப் பட்டதை ரத்து செய்து மீண்டும் ஒரே துறையாக இயங்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையில் மேல்நிலைப்பள்ளி இல்லாத மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 9 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் ஆதிதிராவிடர் நலத்துறை கல்வி அதிகாரி பணியிடம் புதிதாக உருவாக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். நலப்பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வது. மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் முன்னாள் மாநில தலைவர் அம்பிகாபதி, மாநில நிர்வாகிகள் வெங்கடேசன், விஸ்வநாதன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். 

Related Tags :
Next Story