மரத்வாடா மண்டலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பலி


மரத்வாடா மண்டலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பலி
x
தினத்தந்தி 9 Oct 2017 4:02 AM IST (Updated: 9 Oct 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் மரத்வாடா மண்டலத்தில் சமீப நாட்களாக இடி– மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

அவுரங்காபாத்,

மராட்டிய மாநிலம் மரத்வாடா மண்டலத்தில் சமீப நாட்களாக இடி– மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

இதில், பீட் மாவட்டம் பைதான், கன்னடு மற்றும் மஜல்காவ் தாலுகாக்களில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர்.

ஜல்னா மாவட்டம் பத்னாப்பூர் தாலுகா தோபதேஸ்வர் கிராமத்தில் சந்திரபாகா(வயது 52) என்ற பெண் மின்னல் தாக்கி பலியானார். இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story