ஆறுமுகநேரியில் ஏழைகளுக்கு இலவச சிலிண்டர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்
ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் விழா, ஆறுமுகநேரி பஜாரில் நடந்தது. பா.ஜனதா நகர தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
ஆறுமுகநேரி,
ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் விழா, ஆறுமுகநேரி பஜாரில் நடந்தது. பா.ஜனதா நகர தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்க பாண்டியன், சிவகுமார், நகர துணை தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கினார்.
விழாவில் மாவட்ட தலைவர் பாலாஜி, காயல்பட்டினம் மண்டல செயலாளர் பண்டாரம், கிளை கழக செயலாளர்கள் செல்வகுமார், முருகேசன், பிரபாஸ், வர்த்தக அணி செயலாளர் கமல்ராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், முன்னாள் நகர தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பற்குணபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பிரசார அணி நிர்வாகி ராமமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story