கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:15 AM IST (Updated: 9 Oct 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 2 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

விழுப்புரம்,

மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், பெட்ரோல்– டீசல் விலையை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும், நாடு முழுவதும் உள்ள தேவையற்ற 327 சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு பிற சுங்கச்சாவடிகளில் ஆண்டு கட்டணமாக வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் லாரிகள் ஒவ்வொரு குடோன்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதுபோல் மணல் லாரிகளும் நேற்று இயக்கப்படவில்லை.

இந்த லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வழக்கமாக விழுப்புரத்திற்கு கொண்டு வரப்படும் காய்கறி லோடு வரத்து பாதிக்கப்பட்டது. அதுபோல் சென்னை உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் அத்தியாவசிய பொருட்களின் வரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story