லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 3,800 லாரிகள் ஓடவில்லை


லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 3,800 லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 10 Oct 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதையொட்டி 3,800 லாரிகள் ஓடவில்லை.

நெல்லை,

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு, சேவை வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் ஆகியவற்றை கண்டித்தும், இவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் சார்பில் 2 நாட்கள் லாரி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. நெல்லை மாவட்டத்திலும் நேற்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான லாரிகள் இயக்கப்படவில்லை. நெல்லை டவுன் வடக்கு மவுண்ட் ரோடு, நயினார்குளம் கரை ரோடு, நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு, தெற்கு புறவழிச்சாலைகள், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டின் ஓரத்தில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் 3,800–க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதனால் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் லாரிகள் ஓடாததால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.


Next Story