வாக்காளர் பட்டியலில் குளறுபடியை சரிசெய்ய வேண்டும் கலெக்டரிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மனு
வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய கோரி மாவட்ட கலெக்டர் வெங்கடேசிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அப்போது கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கலெக்டர் வெங்கடேசை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3.10.17 அன்று மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது. அந்த வாக்காளர் பட்டியலை, கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலம் சரிபார்த்தபோது, ஒருசில குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளர் அடையாள அட்டையின் எண் 2 நபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
உதாரணத்திற்கு மாநகராட்சி 30-வது வார்டில் உள்ள ஒரு பெண் வாக்காளருக்கும், 34-வது வார்டில் உள்ள ஒரு பெண் வாக்காளருக்கும் ஒரே அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரே வாக்காளர் அடையாள அட்டை தவறாக 2 வார்டுகளில் பதிவாகி உள்ளன. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story