கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஆதிவாசியினர் ‘வன உரிமை பட்டா’ கேட்டு நூதன முறையில் கோரிக்கை
வன உரிமை பட்டா கேட்டு ஆதிவாசியினர் மரப்பட்டையை ஆடை யாக அணிந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து நூதன முறையில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமானவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
நாங்குநேரி அருகே உள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தை சேர்ந்த ஊர் மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென்று தரையில் அமர்ந்து கையில் மண் தட்டு ஏந்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கடம்போடு வாழ்வு கிராமத்தில் கிரானைட் குவாரி தோண்டும் பணி கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது. இதனால் கடம்போடுவாழ்வு, வடக்கு புளியங்குளம், தெற்கு புளியங்குளம், கோதைச்சேரி, வடுகச்சிமதில், சூரன்குடி, கோவிலம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன.
இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கிரானைட் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதவிர நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் செல்வானந்த் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘தாமிரபரணி ஆற்றின் கோடகன் கால்வாய் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் அவசர கதியில் தூர்வாரப்பட்டது. வடக்கு அரியநாயகிபுரம் தடுப்பணையில் இருந்து பேட்டை வரை இந்த பணி நடந்துள்ளது. இந்த பணி முறையாக நடைபெறவில்லை. பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
கீழநத்தம் தெற்கூர், கீழூர், வடக்கூர், மேலூர் பகுதி மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தற்போது மழையின்றி வறட்சி நிலவுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாய வேலையும் கிடைக்கவில்லை. இதனால் தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் கீழநத்தம் பகுதியை நெல்லை மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதாக தெரிகிறது.
இதனால் எங்களுக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்காது. எனவே கீழநத்தம் பஞ்சாயத்து பகுதியை நெல்லை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது.’’ என்று கூறப்பட்டு உள்ளது.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘கடையநல்லூர் நகரசபை 2–வது வார்டில் முப்புடாதி அம்மன் கோவில் தெரு பகுதியில் 6 மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும், போராட்டம் நடத்தியும் குடிநீர் வழங்கப்படவில்லை. எங்களது பகுதியில் சீரான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் விவசாயிகள் சங்கம் சார்பில், ‘‘புளியரை டிம்பர் சாலையில் விவசாயிகள் சங்க அலுவலகத்தை, ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றும், தச்சநல்லூர் பா.ஜனதா வர்த்தக அணி சார்பில், தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும்’’ மனுக்கள் கொடுக்கப்பட்டன. நாங்குநேரி அருகே சங்கணாங்குளம் இந்திரா காலனி மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர்.
இதேபோல் பல்வேறு தரப்பினர் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.
பாபநாசம் அணை காணிக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காணியர் எனப்படும் ஆதிவாசி மக்கள், தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நெல்லை மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் உடலில் மரப்பட்டைகள், இலை, தழைகளை அணிந்து வந்தனர்.
மேலும் கையில் வில்–அம்பும் வைத்திருந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கையில் கோரிக்கை அட்டைகளையும் ஏந்தி நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பழங்குடியினர் மையமாக அறிவித்து அங்குள்ள இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்தவரை அங்கன்வாடி பணியாளராக பணியில் நியமிக்க வேண்டும். வன உரிமை பட்டா வழங்க வேண்டும். விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 9–வது வார்டை பழங்குடியினருக்கான வார்டாக அறிவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story