காய்ச்சலுக்கு 800 பேர் பாதிப்பு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சிறுகுடல் கிராமத்தில் காய்ச்சலுக்கு 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகுடல் கிராமத்தில், அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 1,300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15 நாட்களில் சுமார் 800 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனைகள், வாலிகண்டபுரம், முருக்கன்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 181 பேரும், வாலிகண்டபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 52 பேரும், முருக்கன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 35 பேரும் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
சாலை மறியல்
இதேபோல் தொடர்ந்து அப்பகுதி மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டும், அப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் மருத்துவ முகாம் நடத்தாததை கண்டித்தும், ஊராட்சி நிர்வாகம் தெருக்களில் கொசு மருந்து அடிக்காததை கண்டித்தும் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யப்படாததை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று சிறுகுடல் பஸ் நிலையம் அருகே பெரம்பலூர்-கீழப்புலியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் தங்கதுரை, ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) ராஜா, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாக்கடைகளை சுத்தம் செய்வதாகவும், தெருக்களில் கொசு மருந்து அடிப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story