மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 11 Oct 2017 6:13 AM IST (Updated: 11 Oct 2017 6:13 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது.

மேட்டூர்,

தமிழக மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை தற்போது நின்றுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியில் இருந்து படிப்படியாக குறைந்து நேற்று வினாடிக்கு 19 ஆயிரத்து 317 கனஅடியாக குறைந்துள்ளது.

96 அடியாக உயர்ந்தது

இருப்பினும் தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 95.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 96 அடியாக உயர்ந்தது. காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 96.09 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறையுமானால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது. அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உயர்ந்துள்ளதால் அணையின் வலதுகரை பகுதியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. அதே நேரத்தில் அணைக்கு புதிய தண்ணீர் வரத்து காரணமாக, கரைப்பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீர் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. 

Related Tags :
Next Story