பொய்கை மாட்டு சந்தையில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து நாற்று நடும் போராட்டம்
பொய்கை மாட்டுசந்தையில் கடுமையான சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனை கண்டித்து பொதுமக்கள் அங்கு நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அணைக்கட்டு,
அணைக்கட்டு ஒன்றியம் பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று காலையில் மாட்டு சந்தையும் அதையடுத்து காய்கனிகள் சந்தையும் நடைபெற்று வருகிறது.
பிரசித்தி பெற்ற இந்த மாட்டுச்சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
மாடுகளை வாங்க வெளிமாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வருவார்கள். இதில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை மாடுகள் விற்பனையாகும். சுமார் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வியாபாரம் நடைபெறும்.
இந்த சந்தை ரூ.80 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் அடிப்படை வசதிகளை பராமரிக்காததால் கடுமையான சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. தற்போது பெய்யும் மழையால் இந்த பகுதி சேறும் சகதியுமாக மாறி உள்ளது. காய்கனிகளை வைத்து வியாபாரம் செய்ய சிமெண்டு மேடைகள் அமைக்காததால் மண்தரையில் வைத்துக்கொண்டே வியாபாரம் செய்து வருகின்றனர். சந்தையில் விற்கப்படும் காய்கனிகளின் கழிவுகளை அங்கேயே கொட்டுகின்றனர். அந்த கழிவுகளும் மழைநீரில் நனைந்து அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை சந்தை நடக்கும் பகுதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிம்மதியாக தூங்க முடியவில்லை
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் கூறியதாவது:-
வெளி மாநிலத்தில் இருந்து மாடுகளை விற்பனை செய்யவரும் வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் முதல் நாள் இரவே இங்கு வந்து விடுகின்றனர். ஆனால் சுகாதார கேடு காரணமாக கொசுத்தொல்லை உள்ளதால் அவர்கள் ஓய்வெடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். வருடத்திற்கு ரூ.80 லட்சம் வரை ஏலம்போகும் பொய்கை வாரச்சந்தையை பராமரிக்காமல் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
கடந்த வாரம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தையை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவே இனியாவது சந்தை நடந்து முடிந்த மறுநாள் அதாவது புதன்கிழமைதோறும் சந்தைப்பகுதியை பொய்கை ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் காய்கறி கடைகள் வைக்க சிமெண்டு மேடை அமைக்க வேண்டும். மழைக்காலங்களில் சந்தை நடக்கும் இடத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story