திருச்சி பதிப்பு தினமலர் ஆசிரியர் ஆர்.ராகவன் காலமானார்


திருச்சி பதிப்பு தினமலர் ஆசிரியர் ஆர்.ராகவன் காலமானார்
x
தினத்தந்தி 11 Oct 2017 12:44 AM GMT (Updated: 11 Oct 2017 12:44 AM GMT)

திருச்சி பதிப்பு தினமலர் ஆசிரியர் ஆர்.ராகவன் காலமானார்

திருச்சி,

தினமலர் நிறுவனர் மறைந்த ராமசுப்புவின் நான்காவது மகனும், தினமலர் திருச்சி பதிப்பின் ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் பங்குதாரருமான ஆர்.ராகவன் நேற்று மதியம் உடல்நல குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

மறைந்த ஆர்.ராகவனுக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஆர்.ராமசுப்பு என்கிற பாலாஜி (இணை ஆசிரியர், திருச்சி தினமலர்), ஆர்.ஆர்.கோபால்ஜி (வேலூர் பதிப்பு தினமலர் இணை ஆசிரியர், தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் மாநில பொதுச்செயலாளர்) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

அவரது இறுதி ஊர்வலம் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு திருச்சி கண்டோன்மெண்ட், பறவைகள் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்டு, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை சென்றடைகிறது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. 

Next Story