மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சாவு
x
தினத்தந்தி 11 Oct 2017 9:15 PM GMT (Updated: 11 Oct 2017 9:12 PM GMT)

கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன்.

செங்குன்றம்,

கொளத்தூர் பகுதியைச்சேர்ந்தவர் முருகன் (வயது60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர். இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் கொளத்தூரில் இருந்து ஆவடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். புழல் புத்தகரம் சர்வீஸ் சாலையில் அவர் சென்றபோது கல்லூரி மாணவிகளை ஏற்றி வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா சப்–இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சென்னை பெரம்பூர் பட்டாளம் சி.ஆர் கார்டனை சேர்ந்த வேன் டிரைவர் குமரேசன்(26) என்பவரை கைது செய்தனர்.

 

 

 


Next Story