விவசாய தோட்டத்தில் 8 வயது ஆண் யானை செத்து கிடந்தது


விவசாய தோட்டத்தில் 8 வயது ஆண் யானை செத்து கிடந்தது
x
தினத்தந்தி 12 Oct 2017 4:30 AM IST (Updated: 12 Oct 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

ஆலூர் தாலுகாவில் விவசாய தோட்டத்தில் 8 வயது ஆண் யானை செத்து கிடந்தது

ஹாசன்,

ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா அஞ்சலிகே கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இங்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அடிக்கடி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் அந்தப்பகுதி மக்கள் அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்பத் என்பவர் தனது விவசாய தோட்டத்துக்கு சென்றார். அப்போது அவரது தோட்டத்தில் ஒரு யானை செத்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பத், சம்பவம் பற்றி ஆலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்த யானையை பார்வையிட்டனர். மேலும் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு செத்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அந்த யானை அங்குள்ள வனப்பகுதி அருகே குழிதோண்டி புதைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, விவசாய தோட்டத்தில் யானை செத்து கிடந்தது. அந்த யானை 8 வயது நிரம்பிய ஆண் யானை ஆகும். யானை எப்படி இறந்தது? என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு அறிக்கை வந்த பிறகே அந்த யானை எப்படி செத்தது? என்பது தெரியவரும் என்று தெரிவித்தார். 

Related Tags :
Next Story