ராஜராஜசோழனின் சதயவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி 100 பேர் பங்கேற்பு


ராஜராஜசோழனின் சதயவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி 100 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Oct 2017 10:45 PM GMT (Updated: 11 Oct 2017 10:00 PM GMT)

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடந்த பேச்சுப்போட்டியில் 100 பேர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழனின் 1,032-வது ஆண்டு சதயவிழா வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் தஞ்சை பெரியகோவிலில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு ராஜராஜசோழனின் சிறப்புகளை பற்றி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி தஞ்சையில் நேற்று நடைபெற்றது. போட்டியை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன் தொடங்கி வைத்தார்.

6 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கலைகளின் காவலன் என்ற தலைப்பிலும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நாற்றிசை போற்றிடும் நாயகன் என்ற தலைப்பிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிவநெறி பரப்பிய செம்மல் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர்கள் சிவபாலசுப்பிரமணியன், கலியபெருமாள் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என உதவி ஆணையர் பரணிதரன் தெரிவித்தார். 

Next Story