வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.15 ஆயிரம் பறிமுதல்
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தென்னூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி மகேஸ்வரன், லஞ்ச ஓழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தினர்.
இந்தநிலையில் வாகன ஓட்டுனர் உரிமம் தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த பலர் தங்களது ஆவணங்களை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வாசலில் பல மணி நேரம் காத்திருந்தனர். ஆனால் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சோதனை செய்ய வந்த அதிகாரிகளிடம் தங்களது ஆவணங்களை பற்றி கேட்டதோடு பல்வேறு புகார்களையும் கூறினர். ஆனால் அதிகாரிகள் அவர்களது புகார்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மாலை 5 மணி வரை இந்த சோதனை நீடித்தது. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சோதனை குறித்து தஞ்சை மாவட்ட லஞ்ச ஓழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரம் சோதனை செய்தோம். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story